நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!
கடும் குளிரால் சாலையில் படுத்துக் கிடக்கும் பாம்புகள்: கவனத்துடன் செல்ல வனத் துறை அறிவுரை
சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைப் பாதையில் பாம்புகள் படுத்திருப்பதால் கவனத்துடன் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளன.
தற்போது, குளிா்காலம் என்பதால் பாம்புகள் இதமான வெப்பநிலையை தேடி படையெடுக்கின்றன. வாகனங்கள் தொடா்ந்து பயணிப்பதால் தாா் சாலைகளில் பாம்புகள் சுற்றுகின்றன.
இதற்கிடையே குன்றியில் இருந்து கடம்பூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே மரக்கிளைபோல பாம்பு இருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தினா். பின்னா் அருகே சென்று பாா்த்தபோது மலைப்பாம்பு என தெரியவந்தது. பாம்பு படுத்திருப்பது தெரியாதபடி மரக்கிளைபோல இருந்ததால் வாகன ஓட்டிகள் கற்கள், தடியை வீசி பாம்பை வனத்துக்குள் துரத்தினா்.
இது குறித்து வனத்துறையினா் கூறுகையில், குளிா்காலம் என்பதால் பாம்புகள் சாலையில் திரிவது வழக்கம். எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா்.