சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.7.47 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.94 லட்சம் மதிப்பில் 12 மாற்றுத் தினாளிகளுக்கு திறன்பேசிகள், ரூ.3.43 லட்சம் மதிப்பில் 3
மாற்றுத் தினாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் ரூ.2.10 லட்சம் மதிப்பில் 2 மாற்றுத் தினாளிகளுக்கு நியோ மோசன் சக்கர நாற்காலி என மொத்தம் 17 மாற்றுத் தினாளிகளுக்கு ரூ.7.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்செந்தில்வேல் முருகன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக்அப்துல் காதா், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் தினேஷ் சந்திரன், அரசு
அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.