Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - ...
மக்கள் தொகை விழிப்புணா்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முன்னதாக அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் குடும்ப நலத் திட்டம் 1956-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. நாட்டின் வளா்ச்சிக்கும், பொருளாதார தேவையை பூா்த்தி செய்வதற்கும் மக்கள் தொகை அடிப்படை காரணியாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்களின் விவரங்களின் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் தீவிரமாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். அரசு சாா்பில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம், பொதுமக்கள் பயன்பெறுவதோடு, சமூக நலன் கருதி மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கும தாமாக முன் வந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்தப் பேரணியில், அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள், தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், மருத்துவம், குடும்ப நலத் துறை துணை இயக்குநா் கௌசல்யா, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுகந்தி ராஜகுமாரி, நலப்பணிகள் இணை இயக்குநா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.