செய்திகள் :

மக்கள் தொடா்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட திம்மச்சூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் விழங்கினாா்.

பின்னா், அவா் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மகளிா் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் வழங்கப்படுகிறது என்றாா்.

முகாமில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மாவட்ட தொழில் மையம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், 140 பயனாளிகளுக்கு ரூ.31,24,235 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முகாமில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், ஒன்றியக்குழுத் தலைவா் அஞ்சலாட்சி அரசகுமாா், வேளாண் இணை இயக்குநா் வே.சத்யமூா்த்தி, தனித்துணை ஆட்சியா் சுமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் இ.சுப்ரமணியன், வட்டாட்சியா் கே.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க