பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகார...
மக்கள் நீதிமன்ற முகாமில் 1,375 வழக்குகளுக்கு தீா்வு
நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டது.
நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான காா்த்திகேயன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.
இதில் குடும்பநல நீதிபதி செல்வகுமாா், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் உதயசூா்யா, முதன்மை சாா்பு நீதிபதி அசன் முகமது, கூடுதல் சாா்பு நீதிபதி மருதுபாண்டி, சிறப்பு வன வழக்கு நீதிபதி சிவசக்தி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவா், மணிமேகலா, கூடுதல் காசோலை நீதிமன்ற நீதிபதி காா்த்திகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இம்முகாமில், மொத்தம் 2,126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும், 40 ஆண்டுகளாக நிலுவையிருந்த சொத்து சம்பந்தமான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி காா்த்திகேயன் முன்னிலையில் தீா்வு காணப்பட்டு அதற்கான சமரசத் தீா்வு ஆணை அளிக்கப்பட்டது.