JEE: தேர்வறையில் பல்லி, தொழில்நுட்ப கோளாறு; வழக்கு தொடர்ந்த மாணவர் - அரசுக்கு நீ...
மங்கல காரியங்கள் மனம் போல நிகழ முகப்பேருக்கு வாங்க; திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்
2025 ஜூலை 11-ம் தேதி முகப்பேர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...

முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி முகப்பேர். இது அம்பத்தூர் பகுதிக்கு உட்பட்டது. பாடி, அம்பத்தூர், மண்ணூர்பேட்டை ஆகிய தொழிற்பேட்டைகள் சூழ்ந்த பகுதி முகப்பேர். மிகப்பெரிய ஏரியின் முகப்பு பகுதியாக இருந்ததால் இப்பகுதி முகப்பு ஏரி என்றானது என்பர். இங்குள்ள மகப்பேரீஸ்வரர் பிள்ளை வரம் அருளும் இறைவனாக இருப்பதால் இவ்வூர் மகப்பேறு என்றாகி பின்னர் முகப்பேர் என்றானதாகவும் புராணக் கதை தெரிவிக்கிறது. முகப்பேரில் மேற்கே 1-வது பிளாக்கில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம்.
இது பல்லாண்டுகளாக இப்பகுதியின் மிகச் சிறப்பான காவல் தெய்வக் கோயிலாக விளங்கி வருகிறது. வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அன்னையாக இந்த கருமாரியம்மன் விளங்கி வருகிறாள். குறிப்பாக பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் தாயாக இருந்து வருகிறாள் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எண்ணியவற்றை விரைவிலேயே நிறைவேற்றும் இந்த இந்த சிறப்பான ஆலயத்தில் உங்கள் சக்தி விகடன் 2025 ஜூலை 11-ம் தேதி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடத்த இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். கலியுக அன்னையான ஸ்ரீதேவி கருமாரியம்மன் அருளால் வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். எனவே உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.