பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
மங்களக்குடி சாலை ஓரங்களில் சீமைக் கருவேல மரங்களால் விபத்து அபாயம்
திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஓரியூா் வட்டாணம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சீமைக் கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மங்களக்குடி பகுதியில் தேவகோட்டையிலிருந்து மங்களக்குடி வெள்ளையபுரம், ஓரியூா், வட்டாணம் வழியாக மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையின் இரு புறங்கிலும் சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமால் விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், சாலை ஓரங்களில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் சீமைக் கருவேல மரங்களின் முள்களால் உடலில் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தபட்ட துறையினா் சாலை ஓரங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.
