செய்திகள் :

மசோதாவுக்கு ஆதரவளித்தால் பிகாரில் நிதீஷ் தோல்வி அடைவார்: கபில் சிபல்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்தால் பிகார் பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனையில், வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படிக்க : வக்ஃப் நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இந்த நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞரும் எம்பியுமான கபில் சிபல் பேட்டி அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”வக்ஃப் மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்து நிறைவேற்ற ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? 2014 முதல் குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைக்கப்படுவதை நாம் கண்டுள்ளோம்.

நாட்டில் மதசார்பற்ற கட்சி யார் என்பது இன்று தெரியவரும். பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மசோதாவுக்கு ஆதரவளித்தால் தோல்வியை சந்திக்கும். அதனால், பாஜக எளிதில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு செய்ய வாய்ப்புள்ளது. சிராஜ் பாஸ்வானும் இதையே பின்பற்றுவார் என்று நினைக்கிறேன்” என்றார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

மாநிலங்களவையில் வியாழக்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று(ஏப். 4) அதிகாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மச... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் -நள்ளிரவில் வாக்கெடுப்பு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. சுமாா் 13 மணி நேரம் நடைபெற்ற தொடா் விவாதம் நள்ளிரவு ஒரு மணியளவில் நிறைவடைந்தது. அதன் பிறகு மசோதாவில் கொண்டுவரப்பட்ட ஒவ... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!

பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பதாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு... மேலும் பார்க்க

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என... மேலும் பார்க்க