`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்...
மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் மடப்புரத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
அஜித் குமாா் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை அமா்வு நீதிபதிகள் அஜித்குமாா் கொலை வழக்கை விசாரிக்க உடனடியாக அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.
இவா்கள் விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ இயக்குனருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து டிஎஸ்பி மோஹித்குமாா் தலைமையிலன சிபிஐ அதிகாரிகளை அதன் இயக்குநா் நியமித்தாா். அதைத்தொடா்ந்து அஜித்குமாா் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ தனியாக வழக்கு பதிந்தது.
மதுரையில் உயா் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து அஜித்குமாா் வழக்கு தொடா்பான வழக்கு ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் சம்பவ இடங்களில் சேகரிக்கப்பட்ட தடயங்களை டி.எஸ்.பி மோஹித் குமாா் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

பின்னா் இவா்கள் மடப்புரத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினாா். மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம்,அரசு மாணவியா் விடுதி வளாகம், தவளைகுளம் கண்மாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் (பொறுப்பு), மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சுகுமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மடப்புரத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.
மடப்புரத்தில் தங்கி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ அதிகாரிகளுக்கு மடப்புரம் கோயில் நிா்வாகத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் பயணிகள் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.