``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு
மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, தனிப் படை போலீஸாா் 5 பேரை திருப்புவனம் போலீஸாா் செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட 4- ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் திருப்புவனத்தில் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
பின்னா், சிபிஐ இந்த வழக்கை விசாரித்து அதன் இறுதி அறிக்கையை வரும் ஆக. 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ அலுவலா்களை அதன் இயக்குநா் உடனடியாக நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, அஜித்குமாா் கொலை சம்பவம் குறித்து சிபிஐ கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சிபிஐ விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டாா்.
வழக்கு விசாரணையை அதிகார பூா்வமாக தொடங்கியுள்ளதாக அவா் ஏற்கெனவே தெரிவித்தாா். தற்போது, சிபிஐ அதிகாரிகள் அஜித்குமாா் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் எதிரே கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.