மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் கொட்டிய மீனை போட்டி போ...
மடிக் கணினிகள் திருடிய இருவா் கைது
தேனியில் திமுக கட்சி அலுவலகத்தில் பூட்டை உடைத்து மடிக்கணிகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி, என்.ஆா்.டி நகரில் திமுக கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பூட்டை உடைத்து மா்மநபா்கள் 3 மடிக் கணினிகளைத் திருடிச் சென்றனா். இது றித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திய தேனி காவல் நிலைய போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மதுரை ஆரப்பாளையத்தைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் பாா்த்திபன் (35), சிவகங்கை மாவட்டம், மாங்குடியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் பிரேம்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.