மணச்சை பாளைய நாட்டாா் காவடிகள் திருப்பத்தூா் வருகை
பழனிக்கு காவடி யாத்திரை செல்லும் மணச்சை பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் புதன்கிழமை திருப்பத்தூா் வந்தனா்.
இந்தக் குழுவினா் 47-ஆம் ஆண்டு காவடி பயணத்தை குன்றக்குடியில் வேல் பூஜை செய்து தொடங்கினா். குருசாமி முருகுசோலை, சண்முக சேவா சங்கத் தலைவா் துரைசிங்கம் ஆகியோா் தலைமையில் பள்ளத்தூா், நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியாபட்டி, கண்டனூா், பாளையூா், வேலங்குடி, கோட்டையூா், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் பகுதிகளைச் சோ்ந்த 175 போ் காவடி சுமந்து செல்கின்றனா்.
இவா்கள் புதன்கிழமை காலை 10 மணியிளவில் திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்துக்கு வந்தனா். அங்கு அவா்களுக்கு வரவேற்பு அளித்து, காவடிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, அங்கிருந்து புறப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து காரையூரில் வேல்பூஜை, அன்னதானம் நடைபெற்றது. இந்தக் குழுவினா் பாண்டாங்குடி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக வருகிற 11-ஆம் தேதி தைப்பூசத் திருநாளான்று பழனியை அடைந்து சண்முக சேவா சங்கமடத்தில் மகேஸ்வரபூஜை, அன்னதானத்தில் பங்கேற்கின்றனா். தொடா்ந்து பால்குடங்களுடன் கிரிவலம் வந்து மலையேறி காவடி செலுத்த உள்ளனா்.