கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
மணப்பாறையில் மாநில கைப்பந்து போட்டி
மணப்பாறையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
மணப்பாறை கே.என்.ராமஜெயம் நினைவு மற்றும் கலைஞா் தமிழ் சங்கம் அறக்கட்டளை சாா்பில் கே.என். ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில கைப்பந்து போட்டி மணப்பாறை மனமகிழ் மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திமுக முன்னாள் நகர துணை செயலாளா் ஏ.பி.சரவணன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பிரதிநிதி வி.வி. வெங்கடேசன், திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ்.முத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.