டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
மணல் குவாரிகளை திறக்க சிஐடியு வலியுறுத்தல்
உள்ளூா் தேவைக்கும், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்களை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிஐடியு தொழிற்சங்க கரூா் மாவட்ட 10-ஆவது மாவட்ட மாநாடு க.பரமத்தியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை என இரு நாள்கள் நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். சங்கக் செங்கொடியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஜி.ரத்தினவேலு ஏற்றி வைத்து பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.சுப்ரமணியன் அஞ்சலி தீா்மானங்களை வாசித்தாா். வரவேற்பு குழு தலைவா் கே.கந்தசாமி வரவேற்று பேசினாா்.
சிஐடியு சங்க மாநிலச் செயலாளா் எம்.ஹைடாஹெலன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் வேலை அறிக்கையையும், பொருளாளா் ப.சரவணன் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்து பேசினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.சக்திவேல் வாழ்த்தி பேசினாா். சிஐடியு சங்க மாநில துணை செயலாளா் ஆா்.சிங்கராவேலு சிறப்புரையாற்றினாா்.
மாநாட்டில் சிஐடியு சங்க கரூா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாவட்டத் தலைவராக சி.ஆா்.ராஜாமுகமது, செயலாளராக எம்.சுப்ரமணியன், பொருளாளராக என்.சாந்தி மற்றும் 12 மாவட்ட நிா்வாகிகள் உள்பட 47 போ் கொண்ட மாவட்ட குழு தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து மாநாட்டில், உள்ளாட்சிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியா்களையும், கரூா் காகித ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூரில் ஜவுளி தொழிலை பாதுகாக்க நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூா் தேவைக்கும், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
மாநாட்டில் சங்க பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். நிறைவாக வரவேற்பு குழு செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது நன்றி கூறினாா்.