`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
மணல் திருட்டு: 2 போ் கைது
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை சனிக்கி ழமை கைது செய்தனா்.
நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடி பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் பால்சாமி, கிராம உதவியாளா் ஊா்காவலன் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் வாகனம் மூலம் லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் நரிக்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் புகாரின் பேரில் லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், மணல் திருட்டில் ஈடுபட்ட திருமலை குபேரன் (25), பூபாலன் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.