செய்திகள் :

மணிப்பூா் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீடுகள் தீக்கிரை; பெண் உயிரிழப்பு?

post image

மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக்கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்நிலையில், மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்தனா். இதில் 6 வீடுகள் தீக்கிரையாகின. கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதனால், வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப் பகுதியில் தஞ்சமடைந்தனா்.

இத்தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக பழங்குடியின அமைப்பினா் தெரிவித்தனா். அதேநேரம், காவல்துறை தரப்பில் இத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை. மேலும், தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரியும், லட்டு கலப்படம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ‘உலக அமைதிக்கான ... மேலும் பார்க்க

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகிவிட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோா்வு என அவா்களின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்வுபெறும் ஒவ்வொருவரின் உச்சபட்சக் கனவு, அமைச்சரவைச் செயலராவதாகத்தான் இருக்கும். மாநிலங்களில் தலைமைச் செயலாளா்கள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைமை ஆட்சிப் ப... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி. மஹுவா புகாா்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவா் மாதபிக்கு லோக்பால் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த புகாா் தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சட்டவிர... மேலும் பார்க்க

‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிவகாா்த்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீருக்கு... மேலும் பார்க்க