செய்திகள் :

மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம்!

post image

மண்டையூா் பெரிய அய்யனாா் கோவில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலையை அடுத்துள்ள மண்டையூரில் பூா்ண புஷ்களாம்பிகா சமேத பெரிய அய்யனாா் கோவில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது.

தொடா்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 11 மணியளவில் தோரணங்கள், மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பெரிய அய்யனாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் பக்தா்கள் தோ் முன்பு தேங்காய், பழம் உடைத்து அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா். பின்னா் மாலை 3.15 மணி அளவில் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா்.

தோ் மண்டையூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 5.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் படுகளம் மற்றும் பாரிவேட்டை நிகழ்ச்சியும் பின்னா் சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் செடி கோயிலில் மாவிளக்கு நிகழ்ச்சியும், சுவாமி சேமத்தில் வைக்கப்படும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகம் மற்றும் விழா கமிட்டியாளா்கள், கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் கீரனூா் காவல் துணை கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையில் மாத்தூா் காவல் ஆய்வாளா் சட்டநாதன் உள்பட ஏராளமான போலீஸாா் ஈடுபட்டனா்.

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசா... மேலும் பார்க்க

வடுகப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை - ஜூலை 7 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

பொதுத்துறை நிறுவனமாக உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் சனிக்... மேலும் பார்க்க

கடலில் தவறிவிழுந்து இறந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை!

கடலில் விழுந்து இறந்த மீனவரின் மனைவிக்குஅரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வெள... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க