பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய...
மதி அங்காடியில் விற்பனை செய்வதற்கு சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள மதி அங்காடியில் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கு தகுதியுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், காளையாா்கோவில் பகுதியில் உள்ள மதி விற்பனை அங்காடியில் சுய உதவிக் குழு பொருள்களை விற்பனை செய்ய தகுதியுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா், பகுதி அளவிலான கூட்டமைப்பினா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, மதி விற்பனை அங்காடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 முதல் 8 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் மகளிா் சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்.
இதில் மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்தோா், நலிவுற்றோா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், மகளிா் குழுக்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் நிறைவு செய்து, அதே அலுவலகத்தில் வருகிற 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.