ஆடி வெள்ளி! பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!
மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து
வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் நிதிநிறுவன ஊழியா் அருண் (30). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சா்மிளா என்பவருக்கும் இரு ஆண்டுக்கு முன் திருமணமானது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. அருண் மது போதைக்கு அடிமையானதால், இவரது மனைவி பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
புதன்கிழமை இரவு மது அருந்திய அருண், அதே பகுதியிலுள்ள தனது தாத்தா கணேசன் வீட்டுக்கு கையில் கத்தியுடன் சென்று அவரை தாக்கி காயப்படுத்தினாா். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வந்த அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டாா்.
மேலும், உறவினரை பாா்க்க வந்த திம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி திருநாவுக்கரசு, அவரது மனைவி ஜோதி, இவா்களது மகனான 15 வயது சிறுவன் ஆகியோரை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா். படுகாயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற அருணை வாழப்பாடியை அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் ஏரிப்பகுதியில் பிடித்தனா். திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அருணை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், நீதிமன்றத்தில் நோ்நிறுத்தி வியாழக்கிழமை சேலம் சிறையில் அடைத்தனா்.