Vidaa Muyarchi: 'அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!'- ...
மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!
புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுவை மாநில மதுப்புட்டிகளை கடந்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவா்கள், விழுப்புரம் ஜி.ஆா்.பி தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சந்துரு (28), கணேசன் மகன் சரவணன் (45) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். பைக்கில் கடத்திவரப்பட்ட 90 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 180 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.