கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது
போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி நகா் பழைய பேருந்து நிறுத்தம் அருகே அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (40), குலாலா்பாளையம் பகுதியில் பாண்டி (71) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெருமாள், பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.