`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது
பெரியகுளம்: பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தென்கரை திருவள்ளுவா் சிலை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.
அதில், அவா் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த சின்னகாளை (76) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்பவா் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 8 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.