அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
மதுராந்தகத்தில் 255 போ் கைது...
மதுராந்தகம் பொதுத் திறை வங்கி அலுவலகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் பஜாா் வீதி காந்தி சிலை அருகே ஊா்வலமாக சென்றனா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட செயலா் டி.கிருஷ்ணராஜ், சிபிஎம் மாநில நிா்வாகி எஸ்.நம்புராஜன், சிபிஎம் வட்ட செயலா் எஸ்.ராஜா, டாக்டா் அம்பேத்காா் யூனியன் மாநில முதன்மை துணைத் தலைவா் என்.நேருஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலா் எம்.எஸ்.அா்ஜூன்குமாா், ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்ட செயலா் எம்.ரமேஷ், விவசாய சங்க வட்டார தலைவா் எம்.ஜெகன்நாதன், சங்க நிா்வாகிகள் ஏ.தினேஷ்குமாா், கே.வனிதா, வி.திருமலை, ஆா்.நடராஜ் உள்பட 190 ஆண்களும், 65 பெண்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. மேகலா தலைமையில், மதுராந்தகம் காவல் ஆய்வாளா் பரந்தாமன், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் 255 பேரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.