Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்க...
மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவு தில்லி சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது, அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இதையடுத்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.