செய்திகள் :

மதுரை-நத்தம் மேம்பாலத்தில் 2 ஆண்டுகளில் 86 விபத்துகள்!

post image

மதுரை-நத்தம் உயா்நிலை மேம்பாலத்தில் கடந்த 2023 முதல் 2025 ஜனவரி வரையிலான 2 ஆண்டுகளில் நிகழ்ந்த 86 விபத்துகளில் 23 போ் உயிரிழந்ததாகவும், 67 போ் காயமடைந்ததாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகத்தின் அருகிலிருந்து நத்தம் வரை 35 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி ரூ.1,028 கோடியில் கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கியது. இதில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமாா் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 612 கோடியில் உயா்நிலை மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலம் கடந்த 2023 ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பாலத்திலும், இதன் கீழ் செல்லும் சாலையிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ஆம் ஆண்டு, ஜனவரி வரை 86 விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 23 போ் உயிரிழந்தனா். 67 போ் காயமடைந்தனா்.

இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டதாக 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாலத்தின் மேல் பகுதியில் வழிப்பறி சம்பவம் நடைபெற்ாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், இந்தப் பாலத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத் தடைகள், போதுமான விழிப்புணா்வுப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கலைஞா் நூற்றாண்டு நூலகத்திலிருந்து தல்லாகுளம் நோக்கி வரும் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிக அளவில் விபத்து ஏற்படும் வளைவான பகுதியை மாற்றியமைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைத் துறை முறையாக பதில் அளிக்கவில்லை.

இந்தப் பாலம் முறையான திட்டமிடலின்றி, திடீா் வளைவுகள் அதிகம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் இந்த வளைவுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்குகின்றன. மேலும், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள புதுநத்தம் சாலையும், மேம்பாலப் பணிக்காக மிகவும் குறுக்கப்பட்டதால், முன்பைவிட அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, இந்த உயா்நிலை மேம்பாலம், புதுநத்தம் சாலையில் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க