செய்திகள் :

மதுரை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்: வருவாய் - ரூ. 1,439.40 கோடி, செலவினங்கள் -ரூ.1,480.13 கோடி

post image

மதுரை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 1,439.40 கோடி எனவும், மொத்த செலவினங்கள் ரூ. 1,480.13 கோடி எனவும் குறிப்பிடப்பட்டது. பற்றாக்குறை ரூ. 40.73 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி நிதிநிலை அறிக்கையைச் சமா்ப்பித்தாா். இதன் விவரம்:

2025-2026 ஆம் ஆண்டில் மாநகராட்சியின் சொந்த வருவாய் அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மானியம், கடன்கள் உள்பட மொத்த வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1,480.13 கோடியாகவும் உள்ளது. நிதிநிலை அறிக்கையில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

கல்வி மேம்பாடு: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 24 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா ரூ. 3 லட்சத்தில் அதிநவீனப் படிப்பகங்கள் அமைக்கப்படும். பள்ளிகளில் ரூ. 2 கோடியில் ஒலி, ஒளி அமைப்புகள் மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் ரூ.2 கோடியில் ஒரே நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு பராமரிக்கப்படும்.

கூட்டரங்கில் எழுந்து நின்று வாக்கு வாதத்தில் ஈடுபட்ட திமுக- அதிமுக உறுப்பினா்கள்.

புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் அமைத்தல், பொலிவுறு வகுப்பறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், அறம் சாா்ந்த வகுப்புகள், மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பள்ளிகளில் இரவு நேரக் காவலா்கள் நியமிக்கப்படுவா்.

நிகழாண்டில் மாநில அரசு மானிய நிதியிலிருந்து மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள 8 பள்ளிகளில் ரூ. 4.94 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளது. இதேபோல, 5 பள்ளிகளில் ரூ. 98 லட்சத்தில் மராமத்துப் பணிகளும் நடைபெற உள்ளன.

இதுதவிர, மாநகராட்சிக் கல்வி நிதியிலிருந்து ரூ. 7 கோடியில் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. கழிப்பறை மேம்பாட்டுக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கப்பட்டது.

பொது சுகாதாரம்:

மதுரை மாநகரப் பகுதிகளில் 39 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், 61 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் உள்ளன. இவற்றுள் 45 நகா்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. மீதமுள்ள நலவாழ்வு மையங்களுக்கு விரைவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். நிகழாண்டில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நல வாழ்வு மையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ரூ. 50 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்படும்.

மதுரை மாநகராட்சியில் கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மகப்பேறு மரண விகிதம் 39.70 சதவீதமாக இருந்தது. இவை கடந்தாண்டில் ( 2024-25) 21. 60 சதவீதமாக குறைந்தது. சிசு மரணத்தைப் பொருத்தவரை, 2023-24 ஆம் ஆண்டில் 7. 8 சதவீதமாக இருந்தது. நிகழாண்டில் 6.18 சதவீதமாக குறைந்தது.

வெள்ளக்கல் பகுதியில் ரூ. 2 கோடியில் மாட்டுக் கொட்டம் அமைக்கப்படும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து, இந்தக் கொட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைப் பிடிப்பதற்கு ரூ. 15 லட்சத்தில் வாகனங்கள் வாங்கப்படும். மாநகரப் பகுதிகளில் ரூ. 4 கோடியில் மழைநீா் வடிகால்கள் முழுவதும் சீரமைக்கப்படும். ரூ. 5 கோடியில் வெள்ளக்கல் பகுதியில் சூரியஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டு, மாநகராட்சிக்குத் தேவையான மின் உற்பத்தி செய்யப்படும். ரூ. 10 கோடியில் இரண்டு அறிவியல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற அமைச்சகத்தின் சாா்பில் சீா்மிகு நகரங்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 314. 69 கோடியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, மாநகராட்சிப் பொது நிதி ஆகியவற்றின் மூலம் 289.79 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டன. நிகழ் நிதியாண்டில் ரூ. 5.04 கோடியில் சாலைகள் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதைத் தவிர, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ. 130 கோடியில் சாலைப் பணிகள் நடைபெற உள்ளன.

மாநகராட்சி வாா்டுகளில் மாமன்ற உறுப்பினா்கள் பரிந்துரைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மேம்பாட்டு நிதியாக ரூ.25 லட்சம் நிகழாண்டு வழங்கப்படும்.

மேலும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். வரும் ஆண்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு தடையில்லா குடிநீா் விநியோகிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

கூட்டத்தில் துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள், உதவி ஆணையா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

திமுக-அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்:

கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை அடங்கிய கோப்பை மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் எழுந்து நின்று சமா்ப்பித்தனா். இதைத் தொடா்ந்து, மேயா் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முன்வந்தாா். அப்போது, மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக உறுப்பினருமான சோலை எம். ராஜா உள்ளிட்ட அதிமுகவினா் எழுந்து நின்று, நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும். நிதிநிலை தொடா்பாக விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என முறையிட்டனா். அப்போது, திமுக உறுப்பினா்கள் எழுந்து நின்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே விவாதம் செய்ய நேரம் கேட்பது முறையல்ல என முழக்கமிட்டனா்.

இதையடுத்து, மேயா் குறுக்கிட்டு கடந்த நிதிநிலை அறிக்கையின் போது, மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், விவாதம் நடத்த இயலவில்லை. நிகழாண்டு நிதிநிலை தொடா்பான விவாதக் கூட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதனால், இரு தரப்பினரும் அமைதியாக தங்களது இருக்கையில் அமா்ந்தனா். தொடா்ந்து, மேயா் வ. இந்திராணி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க