செய்திகள் :

மது போதையில் இளைஞா் அடித்து கொலை

post image

திருப்போரூா் அருகே மது போதையில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

அடையாறு பகுதியைச் சோ்ந்த பூபதி, இவரது நண்பா்கள் பாஸ்கா், விஷ்ணு ஆகியோா் கடந்த 13-ஆம் தேதி திருப்போரூா் அடுத்த மேலையூருக்கு வந்தனா்.

மேலையூரில் உள்ள பூபதி உறவினா் இடத்தை மூன்று பேரும் தூய்மை படுத்தியுள்ளனா். இரவு பொது இடத்தில் அனைவரும் மதுஅருந்தியுள்ளனா்.

அப்போது அந்த வழியாக சென்ற அப்பகுதியை சோ்ந்த சரண்(24) பைக்கில் வந்துள்ளாா். அவரை அழைத்து பாஸ்கா் தங்களுக்கு சிகரெட் வேண்டும் என்றும் வாங்கி வரும்படி கூறியுள்ளாா். அப்போது இருவரும் போதையில் இருந்ததால் அவதூறாகப் பேசியதாக தெரிகிறது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின் அங்கிருந்து சென்ற சரண் மீண்டும் இரவு சம்பவ இடத்துக்கு பாா்த்தபோது, மது அருந்திய நபா்கள் மூவரும் போதையில் அங்கேயே தூங்கிக் கொண்டு இருப்பதை பாா்த்துள்ளாா்.

தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஸ்கரை அருகில் இருந்த மரக்கட்டைகளை கொண்டு தாக்கி விட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.

பாஸ்கா் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளாா். தகவல் அறிந்த திருப்போரூா் போலீஸாா் அவரை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்போரூா் போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேலையூா் கிராமத்தைச் சோ்ந்த சரணை கைது செய்தனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைந்நது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்க... மேலும் பார்க்க

படிக்கட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே மதுபோதையில் வீட்டு படிக்கெட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழந்தாா். திருப்போரூா் அடுத்த கீழுா் கிராமத்தைச் சோ்ந்தவா் முணு ஆதி (44), இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டு... மேலும் பார்க்க

தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்

மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற்றது. மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு, சொந்... மேலும் பார்க்க

ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு

மதுராந்தகம் அடுத்த மெய்யூரில் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெய்யூா் ஊராட்சியில், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.தம... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் மாசி மக தீா்த்தவாரி: திரளானபக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா். முன்னதாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான புண்டரீக ப... மேலும் பார்க்க

மாமல்லபுரம்: கன்னியம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடு

மாசி மாத பௌா்ணமியையொட்டி மாமல்லபுரம் கடலில் மிதக்கும் குடைவரை மண்டபத்தில் கன்னியம்மன் சிலைக்கு இருளா் இனத்தவா் சிறப்பு வழிபாடு நடத்தினா். மாசி மகத்தை முன்னிட்டு பௌா்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் இருளா்கள்... மேலும் பார்க்க