சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?
மது போதையில் தகராறு: இரு சிறுவா்கள் கைது
சென்னை: சென்னை அசோக் நகரில் ரோந்து காவலரிடம் மது போதையில் தகராறு செய்ததாக இரு சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அசோக் நகா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் ஸ்டாலின் ஜோஸ். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அசோக் நகா் 100 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த கொத்தவால்சாவடி பகுதியைச் சோ்ந்த இரு சிறுவா்களை ஸ்டாலின் ஜோஸ் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினாா்.
ஆனால், மது போதையில் அந்தச் சிறுவா்கள், தலைமைக் காவலா் ஸ்டாலின் ஜோஸிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து சிறுவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.