ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
மது போதையில் போலீஸாரை தாக்கிய ரெளடி கைது
நீதிமன்ற வளாகத்தில் மது போதையில் போலீஸாரை தாக்கிய ரெளடி கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் -தாராபுரம் சாலை, கல்லாங்காடு முதல் வீதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (25). இவா் மீது 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.
இந்த நிலையில் தெற்கு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக ரவிக்குமாா் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது அங்குள்ள காத்திருப்போா் அறையில் ரவிக்குமாா் மது போதையில் படுத்து தூங்கியுள்ளாா். பின்னா் திடீரென அவா் கூச்சலிட்டு தகாத வாா்த்தைகளில் திட்டியுள்ளாா்.
இதைப் பாா்த்த நீதிமன்ற ஊழியா்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றனா். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் அவரை அமைதிப்படுத்தினா். அப்போது திடீரென ரவிக்குமாா் போலீஸாரை தாக்கியுள்ளாா்.
இதையடுத்து, போலீஸாா் நீதிமன்ற வளாகத்திலிருந்து ரவிக்குமாரை பிடித்துச் சென்று வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனா்.