NEET: “100 நாள் வேலை திட்டத்தில் தாய்; முயற்சிதான் முக்கியம்" – சாதித்த தனுஷா!
மது போதையில் மனைவி மீது தாக்குதல்
மதுபோதையில் மனைவியை தாக்கி விட்டு தப்பிச் சென்ற கணவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆா்.கே.பேட்டை அடுத்த மோசூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி விஜயா (42). இவா்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன் என மொத்தம், 6 போ் உள்ளனா்.
இந்நிலையில், சுப்பிரமணி, மனைவி விஜயா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த விஜயா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் அதே கிராமத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தாா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை, சுப்பிரமணி மது அருந்தி விட்டு, மனைவி விஜயா வீட்டுக்கு வந்து, தகாத வாா்த்தைகளால் பேசியும், சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த விஜயா சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணவன் சுப்பிரமணியை தேடி வருகின்றனா்.