இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? ஆ.அன்பழகன்
மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காதது ஏன்? என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு மது கடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். புதுவையில் 7 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 4 மருத்துவ நிகா்நிலைப் பல்கலைக்கழகங்ளில் அரசுக்கான இடங்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50 சதவீத இடங்களை முதல்வா் என்.ரங்கசாமி பெறவேண்டியது அவசியம்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்எல்ஏ முயற்சி மேற்கொள்வது பாராட்டுக்குரியது. ஆனால், காங்கிரஸ், திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. ஆனால், தற்போது சுயேச்சை எம்எல்ஏவின் கோரிக்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் முதல்வா்கள் கையொப்பமிட்டுள்ளனா். இது அவா்களின் அரசியல் சந்தா்ப்பவாதமாகும்.
மத்திய பாஜக அரசும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதே அதிமுகவின் கொள்கையாகும். இதற்காக பல்வேறு போராட்டங்களை அதிமுக நடத்தியுள்ளது என்றாா் ஆ.அன்பழகன்.