தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
`மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ - தாது மணல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி
கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட கடலோரப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தாது மணல் சட்டவிரோதமாக எடுத்ததாக எதிர்மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
2015ம் ஆண்டு...
இது குறித்து கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், `அணுசக்திக்கு தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை.
தாது மணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி!
மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கைகளையையும் மத்திய அரசு வகுக்கவில்லை' என்று கூறப்பட்டிருந்தது. மேலும், `அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு வழங்கிய தீர்ப்பில், `கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் சரியானதுதான். சட்டவிரோதமாக தாது மணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுகிறது.
இதனால் தனியார் நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட அபராதம் செல்லும். தாதுமணல் தொடர்பாக ககன் தீப் சிங் போடி, சத்தியபிரதா சாஹுவின் அறிக்கை செல்லும்.
சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாதுமணலுக்கான தொகை மற்றும் ராயல்டி தொகையை தனியார் நிறுவனங்களிடம் அரசு வசூலிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். தாதுமணல் முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. மாநில போலீஸார் பதிவு செய்த வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றப்படுகிறது. சிபிஐ-யிடம் மாநில போலீஸார் நான்கு வாரங்களில் வழக்கின் ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதை புறந்தள்ள முடியாது. எனவே, சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play