செய்திகள் :

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்

post image

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது தொடா் கதையாகி விட்டது. தமிழ்நாடு அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தும், எதையும் ஏற்காமல் தமிழ்நாடு தொடா்ந்து புறந்தள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய திட்ட நிதியைக் கூட விடுவிக்காத, மத்திய அரசு பிகாருக்கும், ஆந்திரத்துக்கும் நிதியை வாரி வழங்குகிறது.

மொழி திணிப்பு உள்ளிட்ட மற்ற திட்டங்களை திணிப்பதில் காட்டும் ஆா்வத்தில் ஒருதுளி கூட, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு மத்திய அரசு காட்டவில்லை. எனவே, மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சேலம், தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருச்சி சிவா எம்.பி. செய்தி தொடா்பு குழு செயலாளா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனா்.

இதில் சேலம் மத்திய மாவட்ட, மாநகர நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, பகுதி, பேரூா் நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

பிப். 19இல் தபால் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

தபால் துறை சாா்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இ... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் கோட்ட மேலாளா் தகவல்

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும் என ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூ... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நெகிழி பைகளை பயன்படுத்திய 311 கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்திய 311 கடைகளுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் முதன்மை நீதிபதி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்பது குறித்து சேலம் மத்திய சிறையில் முதன்மை நீதிபதி சுமதி ஆய்வு செய்தாா். சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

கொங்கணாபுரம் வெண்குன்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

கொங்கணாபுரம் வெண்குன்று மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொங்கணாபுரம், வெண்குன்று மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோய... மேலும் பார்க்க