சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, பிரபல இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரத்திலும், நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் உகலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்களைச் சந்தித்தது குறித்து அவர் பதிவில் கூறியதாவது:
உங்களை நேரில் சந்திப்பதும், புன்னகையை, கதையை பகிர்ந்து கொள்வதும் உங்களை படத்திற்காக அழைப்பதும் மந்திரம் போல கிளர்ச்சியூட்டும் அனுபவம்.
உங்கள் அன்பு, வார்த்தை, கதகதப்பு எல்லாமே எங்களுக்கு உலகம் போன்றது. பரதா ஆக.22-இல் வெளியாகிறது. இதுவரை அளித்த அதே ஆதரவும் அன்பும் படத்துக்கு கிடைக்குமென நம்புகிறேன் என்றார்.
இந்தப் படம் பர்தா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.