செய்திகள் :

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ - ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

post image
திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள சாத்தனூர் அணையில் 119 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும்.

சாத்தனூர் அணை திறப்பு: ராமதாஸ் அறிக்கை...

தொடர் கனமழைக் காரணமாக, சாத்தனூர் அணை நிரம்பியச் சூழலில், `முன் அறிவிப்பின்றி அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்கள் நாசமானதாக’ பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டி, இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ராமதாஸின் அறிக்கையில், ``எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவு 1.30 மணியளவில், விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. பொறுப்பற்ற அரசின் மிக மோசமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பலநூறு கிராமங்களையும் சுற்றிவளைத்த வெள்ளநீர், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் திடீரென தண்ணீர் புகுந்ததால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பல கிராமங்களுக்குள் மீட்புக் குழுவினரே இன்னும் செல்ல முடியாததால், அங்குள்ள மக்களுக்கு உணவுகூட கிடைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்துவிட்டன.

மருத்துவர் ராமதாஸ்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே சாத்தனூர் அணையில் இருந்து கணிசமான அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது. ஆனால், எந்த எஜமானரின் ஆணைக்காக அவர்கள் காத்திருந்தார்கள்? என்பது தான் தெரியவில்லை. 2015-ம் ஆண்டு ஓர் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதையே மீண்டும் மீண்டும் கூறி தனது தோல்விகளை நியாயப்படுத்தி வந்த தி.மு.க அரசு, இப்போது நள்ளிரவில் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதன் மூலமாக அதைவிட பல மடங்கு பேரழிவுக்குக் காரணமாகியிருக்கிறது.

ஆட்சி செய்யவே தகுதி இல்லாத கட்சி தி.மு.க என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம். தமிழ்நாட்டு மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசும் அதற்கான நிதியை வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இதே தகவல்களைக் கூறி தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த நிலையில், ``சாத்தனூர் அணையின் நிலைக் குறித்து 5 கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டு, துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால்தான் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்’’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் தி.மு.க-வின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.

அமைச்சர் துரைமுருகன்

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நீர் திறப்புப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். வெள்ளம் வெளியேறியபோது, அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீது வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

அணையின் உதவி செயற்பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணித்து அவ்வபோது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார். அது அரசின் கவனத்திற்கு வந்து உடனே முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. 5-வது முன்னெச்சரிக்கை அளவாக விநாடிக்கு 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கான அபாயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கணிக்க முடியாத அளவுக்கு அணைக்கு நீர் வரத்து இருந்தது. அந்த நேரத்தில் மிக அளவாக தண்ணீர் திறந்துவிடாமல் போயிருந்தால், அணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும்.

தென்பெண்ணை ஆறு

பெருமளவில் ஏற்பட இருந்த உயிர் இழப்புகளை மிக சாதுர்யமாக செயல்பட்டு, மக்களை அரசுப் பாதுகாத்திருக்கிறது என்பது நீர் மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்குப் புரியும். நிலைமையை அரசு சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் உயிர்கள் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது’’ என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் துரைமுருகன்.

இதைத்தொடர்ந்து, காட்பாடியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், சாத்தனூர் அணைக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் ``அந்த மேதாவிகளுக்குத்தான் அறிக்கை விட்டிருக்கிறேன்’’ என்று ஒற்றை வரியில் கடந்து சென்றுவிட்டார்.

Cibil: `எமதர்மனுக்கு சித்ரகுப்தர் போல நமக்கு சிபில்'- சிபில் ஸ்கோரை சாடிய கார்த்திக் சிதம்பரம்

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று வங்கி சட்டத் திருத்த மசோதாவின் போது, சிபில் ஸ்கோர் குறித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சு கவனத்தை... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கும்போதே, அதானி சந்திப்பு உறுதியாகிறது..!” - NTK கார்த்திகைச்செல்வன்

``அதானி விவகாரத்தில் தி.மு.க-வை டார்கெட் செய்யும் நாம் தமிழர், பா.ஜ.க-வை கண்டுகொள்வதில்லையே.. அதானியை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த உங்களுக்கும் தயக்கமா?” ``அதானி மூலமாக ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்... மேலும் பார்க்க

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி; 78 பேர் அதிரடி பணி நீக்கம் - நெல்லை மண்டலத்தில் பரபரப்பு!

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிக்களுக்கான பணியிடத்தில் போலி சான்றிதழ் வழங்கி அரசு பணியில் சேர்ந்த 78 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஒரே வெள்ளத்தில் நொறுங்கிய புதிய பாலம்; திராவிட மாடல் மீது எடப்பாடி விமர்சனம் - கள நிலவரம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை,... மேலும் பார்க்க

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் ... மேலும் பார்க்க

Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் மீது போடப்பட்ட மிரட்டல் வழக்கு 'தள்ளுபடி'

'ரெய்டு' என்றுக்கூறி தொழிலதிபர்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுக்க மிரட்டியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா, கர்நாடக மாநில முன்னாள் பாஜக தலைவர் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவ... மேலும் பார்க்க