சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
மனமகிழ் மன்றத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் அத்திகுளம், செங்குளம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ராஜீவ் காந்தி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சிச் செயலா் விஜயகுமாா் வரவேற்றாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி பிரதான சாலையில், மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகா் நுழைவுப் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கூடம் அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி அளித்தால் மாணவா்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தத் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதே போல, பிள்ளையாா்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.