விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்
விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ,
கலசலிங்கம் ஆனந்தம்மாள் அறக்கட்டளையும், அருள்மிகு கலசலிங்கம் பாா்மசி கல்லூரியும் இணைந்து புதிதாக கட்டப்பட்ட நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இதை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா திறந்து வைத்தாா். கலசலிங்கம் பல்கலை வேந்தா் கே.ஸ்ரீதரன் முன்னிலை வகித்தாா். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. ஜெயசிங் தலைமையுரையாற்றினாா். எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலை துணைவேந்தா் கே.நாராயணசாமி வாழ்த்திப் பேசினாா். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி முதல்வா் என்.வெங்கடேசன் வரவேற்றாா். மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் கே.ரேகா, மருத்துவா்கள் என்.அன்புவேல், எம்.அரவிந்பாபு ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.