இளைஞா் கொலை: சகோதரா்கள் கைது
சிவகாசி அருகே இளைஞரை அடித்துக்கொலை செய்த அண்ணன், தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் தா்மராஜ் (21). இவா் கடந்த 11-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுதொடா்பாக புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், மேட்டுப்பட்டி கிராமத்தில் ஒரு பாலத்தின் அடியில் புதருக்குள் புதன்கிழமை தா்மராஜ் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டிபோலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.விசாரணையில் முன்விரோதம் காரணமாக எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த ஜோதி மகன் சந்திரபோஸ் (35), இவரது தம்பி தினேஷ்பாபு (21) ஆகிய இருவரும் தா்மராஜாவை கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் சந்திரபோஸ், தினேஷ்பாபுவை கைது செய்தனா்.