இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
மனிதநேய மக்கள் கட்சி 17 -ஆவது ஆண்டு தொடக்க விழா
மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சாா்பில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 புதிய உறுப்பினா்கள் இணையும் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, தென்னூா் அண்ணா நகரில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது தலைமை வகித்தாா். மமக மாவட்ட செயலா் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலா் இப்ராஹிம், மாவட்ட பொருளாளா் ஹுமாயூன் கபீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மமக பொது செயலரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான ப. அப்துல் சமது எம்எல்ஏ கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சியில் இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், திரளான கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.