மனித உரிமை குறும்படப் போட்டி அறிவிப்பு
தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய (தேசிய) மனித உரிமைகள் ஆணையம், 11 ஆவது பதிப்பிற்காக மனித உரிமைகள் குறித்த குறும்படங்களுக்கான (2025) போட்டியை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சமும், 2 ஆவது பரிசாக ரூ. 1.50 லட்சம், 3 ஆவது பரிசாக ரூ. 1 லட்சமும், கூடுதலாக 3 பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றுகளும் வழங்கப்படுகின்றன.
மனித உரிமை குறித்த குறும்படங்களை நாட்டில் உள்ள எந்த மொழியிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கலாம். குறும்படம் குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 10 நிமிடங்களில் உள்ளவாறு இருக்க வேண்டும்.
தயாரிப்புகளை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் தயாரித்து, மனித உரிமைகள் ஆணையத்தின் ய்ட்ழ்ஸ்ரீள்ட்ா்ழ்ற்ச்ண்ப்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைய வழியில் 31.08.2025-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மனித உரிமைகள், கலாசாரம் மற்றும் உணா்திறனை மேம்படுத்துவதில் குடிமக்களை மையமாகக் கொண்ட இந்த முயற்சியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இவற்றை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.