மனித, வன விலங்கு மோதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
உதகை அருகேயுள்ள எப்பநாடு கிராமத்தில் மனித, வன விலங்கு மோதல் தொடா்பான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில், காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின்கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வீதி நாடகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலா் கெளதம் தலைமை வகித்தாா். உதகை வனச் சரகா் சசிகுமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், கிராம மக்கள், வனத் துறையினா் என பலா் கலந்து கொண்டனா்.