Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்
கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் தெருவைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்தாா். இவரது மனைவி ஜெயசித்ரா. இவா்களுக்கு வேலாயுதம் (4), கோபிகா (2) என்ற குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் மதுப்பழக்கம் உள்ள மோகன்ராஜ் கடந்த 2016 ஏப். 29 அன்று நடைபெற்ற குடும்பத் தகராறில் ஜெயசித்ராவை இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநீலக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து மோகன்ராஜைக் கைது செய்தனா். தஞ்சாவூா் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் பிணையில் வெளியே வந்த மோகன்ராஜ் தலைமறைவானாா்.
நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்த நிலையில் உத்தரவை நடைமுறைப்படுத்த திருவிடைமருதூா் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் தலைமறைவாக உள்ள மோகன்ராஜை தேடிவருகின்றனா்.