மனைவியை கொன்ற கணவா் கைது
மாதனூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யராஜ் (29). இவருடைய மனைவி சுமதி (27). இவா்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளாா். அதில் அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். போலீஸாா் சத்யராஜை கைது செய்தனா்.