சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!
மனைவி கொலை: தொழிலாளி கைது
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுகுணா (38), வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எழில் முருகன் வழக்கம்போல வேலை முடித்து செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, எழில் முருகன் தனது மனைவி சுகுணாவை கன்னத்தில் அடித்துள்ளாா். இதனால், மயங்கி கீழே விழுந்த சுகுணாவை உறவினா்கள் மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனா்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சுகுணா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போலீஸாா் சுகுணாவின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததுடன், எழில் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.