திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
மனைவி, மகனைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சுபான்ஷு சுக்லா!
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா! தமது மனைவி, மகனை இன்று சந்தித்து உரையாடினார்.
கிட்டத்தட்ட மூன்று வார காலம் புவியீா்ப்பு விசை இல்லாத சூழலில் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு திரும்பியிருப்பதால் அவா்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதற்காக, 7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்தநிலையில், மருத்துவ கண்காணிப்பிலிருக்கும் சுக்லாவை அவரது மனைவியும் மகனும் புதன்கிழமை(ஜூலை 16) நேரில் சந்தித்தனர்.
அப்போது அவர்களை சுக்லா கட்டியணைத்து அரவணைத்து அன்பைப் பொழிந்தார். இந்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.