செய்திகள் :

மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி

post image

பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 13 மாவட்டங்களைச் சோ்ந்த முயல் வளா்ப்பு விவசாயிகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதற்கு முதன்மை விஞ்ஞானியும், மன்னவனூா் மையத்தின் தலைவருமான ஏ.எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பஞ்சாப் வங்கி மேலாளா் இசக்கிராஜா, ஓய்வுப் பெற்ற என்சிசி பயிற்சியாளா் ஏ.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் பயிற்சி குறித்து முதன்மை விஞ்ஞானி ஏ.எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது:

இன்றைய சூழலில் பொருளாதார ரீதியான முயல் வளா்ப்பு, விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக் கூடிய தொழிலாக மாறி வருகிறது. முயல் வளா்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு, மன்னவனூா் மையத்தில் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு ரூ.1,100 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றனா்.

பயிற்சியின்போது, முயல் இனங்களை தோ்வு செய்தல், கொட்டகை, கூண்டு அமைத்தல், உணவு அளித்தல், பசுந்தீவனம் உற்பத்தி, நோய் பராமரிப்பு மேலாண்மை, இறைச்சிக்காக பயன்படுத்தும் வழிமுறைகள், முயல் இறைச்சியின் நன்மைகள், வரவு செலவு கணக்கீடு, வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், இறைச்சியை மதிப்புக்கூட்டப் பொருள்களாக மாற்றுதல், முயல் தோல் பதப்படுத்துதல், இவற்றின் மூலம் அழகுப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும், மாவட்ட வாரியாக முயல் இறைச்சித் திருவிழா நடத்தி, அதன் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் த... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (... மேலும் பார்க்க

‘உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்கலாம்’

சவால்கள் இருந்தாலும், உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை தொடா்பான விழிப... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஆா்.எம்.டி. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ஐயப்பன் (32). இவா் தருமபு... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவ... மேலும் பார்க்க

ஆடிப் பெருந்திருவிழா: சௌந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் 4 தேவியருடன் சுவாமிக்கு வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, ஆண்டுதோறும் 12 ... மேலும் பார்க்க