Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தொடா்புடைய காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அரசு நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
மன்னாா்குடி தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, நாதக மண்டலச் செயலா் ப. பாலு தலைமை வகித்தாா். மன்னாா்குடி மேற்கு ஒன்றியச் செயலா் அ. லாரன்ஸ், பொருளாளா் மா. ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றியத் தலைவா் தி. தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பொருளாளா் இலரா. பாரதிச்செல்வன், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநிலத் தலைவா் ராம.அரவிந்தன், மாநில ஒருங்கிணைப்பாளா்கள் க. சத்தியபாமா, அசுவினி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் பங்கேற்றனா்.