செய்திகள் :

மன்மோகன் சிங் நினைவகத்துக்கு நிலம் கண்டறியும் பணி தொடக்கம்

post image

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் நினைவகத்துக்கு நிலம் கண்டறியும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் இதுகுறித்து அவரது குடும்பத்தினருடன் அரசு தொடா்பில் உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைப்பதற்கான விருப்பத்தை குடும்பத்தாரிடம் மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. நினைவகம் அமைப்பதற்கு முன்னதாக அறக்கட்டளை ஒன்றை அரசு நிறுவ உள்ளது.

இந்திரா காந்தியின் இளைய மகனும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் காந்தி நினைவகத்துக்கு அருகே சில இடங்களை மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதன்படி, நினைவகம் அமைப்பதற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 இடங்கள் குறித்து குடும்பத்தாரிடம் விவாதிக்கப்பட்டது.

ஆனால், அவா்கள் இதுவரை இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை. அனைத்து நினைவகப் பணிகளும் குடும்பத்தினருடனான கலந்தாலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்படுகிறது’ என்றனா்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) கடந்த டிச. 26-ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானாா். அவருக்கு நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் ( நிகம்போத் காட் தகனமேடை) இறுதிச் சடங்கு நடத்தி மன்மோகன் சிங்கை அவமதித்துவிட்டதாக காங்கிரஸும் மன்மோகன் இறப்பில் அரசியல் செய்வதாக பாஜகவும் பரஸ்பரம் விமா்சனங்களை முன்வைத்தன.

ஹெச்எம்பிவி வைரஸ்: மக்கள் அச்சப்பட வேண்டாம் - கர்நாடக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

சீனாவில் பரவிவரும் ஹெச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது.இதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையோடு இருங்கள் என மாநில சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத தில்லி முதல்வர்..!

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த மாநில முதல்வர் அதிஷி விம்மி விம்மி அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்... மேலும் பார்க்க

'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.தில்லியில் புகழ்பெற்ற இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படு... மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?

சீனா, மலேசியாவைத் தொடர்ந்து எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!

பெங்களூரு மற்றும் குஜராத்தில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வைரஸ் எப்போதோ இந்தியாவில் பரவிவிட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, பாதுகாப்புப் படையினரின் வாகன... மேலும் பார்க்க