Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
மயிலாடுதுறையில் நாளை முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெறவுள்ளது.
இதில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளாா்.