அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் போதை பொருள்கள் தடுப்புக்கு சிறப்பாக விழிப்புணா்வு பணிகளை மேற்கொண்ட காவலா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, உதவி ஆணையா் (கலால்) கீதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ், நகராட்சி தலைவா் என். செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.